search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை மந்திரி"

    இலங்கை முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் கடந்த 2005-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய விடுதலைப் புலி 14 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
    பெர்லின்:

    இலங்கை முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் (73).

    இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி கொழும்பில் உள்ள தனது பங்களாவில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலைக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் பொறுப்பு ஏற்றது.

    இதற்கிடையே 2009-ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோல்வி அடைந்தது. அதையடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் ஜெர்மனியில் விடுதலைப்புலிகள் உளவுப் பிரிவைச் சேர்ந்த நவனீதன் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் இலங்கை முன்னாள் மந்திரி லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    லட்சுமண் கதிர்காமர் கொல்லப்பட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைப்புலி கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜெர்மனியின் தனியுரிமை சட்டப்படி கைதான விடுதலைப்புலியின் உண்மையான பெயர் வெளியிடப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இவரை அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

    ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயன்றதாகவும் இவர் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
    இலங்கை மந்திரிகள் நியமனத்தில் அதிபர் சிறிசேனாவுடன் கருத்துவேறுபாடு உள்ளது என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒப்புக்கொண்டார். #Wickremesinghe #Sirisena #MinisterialAppointments #SriLanka
    கொழும்பு:

    இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு பின்னர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கே கடந்த 16-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர் எதிர்பாராத தாமதமாக 3 நாட்கள் கழித்து 30 பேர் கொண்ட மந்திரிகள் பட்டியலை கடந்த வியாழக்கிழமை அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

    அதில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பரிந்துரைத்த சிலரது பெயர்கள் ஏற்கப்படவில்லை என்று தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு படைகள் மற்றும் போலீஸ் இலாகாவை அதிபர் சிறிசேனாவே வைத்துக்கொண்டார். இது அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே அதிகார மோதல் இருப்பதை காட்டியது.



    இதுபற்றி விக்ரமசிங்கே கூறியதாவது:-

    சில ஊடகங்கள் போலியான மந்திரிகள் பட்டியலை வெளியிட்டதுடன், அதனை அதிபர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் செய்தி வெளியிட்டன. இலங்கை சுதந்திரா கட்சி உறுப்பினர் விஜித் விஜயமுனி சோய்சாவை நான் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அவர் பெயர் மந்திரிகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் சில ஊடகங்கள் வெளியிட்டன.

    இதன்மூலம் மக்களை திசைதிருப்ப அவை முயற்சித்துள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மந்திரிகள் நியமனத்தில் அதிபருடன் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளது. ஆனால் இந்த பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். நாடாளுமன்றத்தில் மந்திரிசபை நியமனம் எப்படி நடந்தது என்பது பற்றி பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Wickremesinghe #Sirisena #MinisterialAppointments #SriLanka
    ×